மதுரையிலுள்ள தேவர் - மருது சகோதரர் சிலைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை
முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதைசெலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-ஆவது ஜெயந்தி, அவரது 59-வது குரு பூஜையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், பங்கேற்க பசும்பொன் செல்லும் வழியில் மதுரையில் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதையடுத்து, மருது சகோதரர்கள் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்தநிலையில், நேற்றைய தினம் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வெண்கல சிலைக்கு வி.கே.சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விரைவில் எடப்பாடி கே.பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துவார்கள் என கூறப்படுகிறது.