வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏக்கு தொடர்புடைய 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் எம்எல்ஏ விடுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏயிடம் லஞ்ச ஒழிப்பு துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி ஒப்பந்தங்களை தனது சகோதரர் மற்றும் நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாக புகார் எழுந்துள்ளன. 2014 முதல் 2018 ஆம் ஆண்டுவரை சென்னை மாநகராட்சியில் 464 .02 கோடிக்கு ஒப்பந்தங்களை தமக்கு நெருக்கமான வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன .
தனக்கு நெருக்கமானவர்களுக்கு டெண்டர்களை ஒதுக்கியது குறித்து எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏயிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கேள்வி எழுப்பி வருகின்றனர். அத்துடன் டெண்டர்கள் மூலம் முறைகேடு செய்து சொத்து குவித்தது குறித்தும் எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏயிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதனால் யாரும் எம்எல்ஏ விடுதிக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. அத்துடன் சட்ட ஒழுங்கு போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.


