Type Here to Get Search Results !

இடும்பவனம் கார்த்திக்கும் ஒதுக்கி வைக்கப்படுவார் : திமுக எம்.பி விடுத்த சவால் -நாம் தமிழர் கட்சியில் சலசலப்பு #Seeman

நாம் தமிழர் கட்சியில் இருந்து கருத்துவேறுபாடு காரணமாக வெளியேறி திமுகவில் இணைந்த ராஜீவ்காந்திக்கு, தி.மு.க செய்தி தொடர்பு இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது, ராஜீவ்காந்தி நாம் தமிழர் கட்சியினரை, திமுகவில்  ஸ்டாலின் முன்னிலையில் இணைத்து வருகிறார்.

இந்தநிலையில், நாம் தமிழர் கட்சியை விட்டு வெளியேற பல்வேறு காரணங்களை சொன்னவர், நாம் தமிழர் குறிப்பிட்ட சாதியை ஆதரிக்கிறார்கள். கள்ளமவுனம் சாதிக்கிறார்கள். மேலும், சாதியவாதமாக தமிழ்தேசியம் பார்க்கப்படுகிறது என்றால், தமிழ்தேசியம் என்ற கருத்துருவாக்கம் திராவிடத்தின் நீட்சிதான் என்று நம்புகிற ஒரு ஆள் நான். தமிழ்தேசிய விதை என்பதே திராவிடத்தின் நீட்சிதான் என்று நம்புகிறேன். நாம் தமிழர் கட்சியின் மாநில செயலாளர்கள் 19பேரில் 18 பேர் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள். அப்படித்தான் அங்கே நிலைமை இருக்கிறது என்றார்.


இதையடுத்து, திமுக எம்.பி டாக்டர் செந்தில்குமார், நாம் தமிழர் கட்சியில் மாநில செயலாளர்கள் 18 பேரும் யார் யார் என்பதை பற்றிய பட்டியலை வெளியிட்டார். அதில், தடா சந்திரசேகர், நெல்லை சிவக்குமார், கோட்டைகுமார், வெற்றிகுமரன், பாக்கியராஜன், சிவக்குமார், சுரேஷ்குமார், ராஜேந்திரன், துரைமுருகன், இடும்பவனம் கார்த்திக், செந்தில்நாதன் சேகுவேரா ஆகியோர் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று பட்டியலை வெளியிட்டுள்ளார்.


சீமான் மாற்று அரசியல் பேச தகுதியற்றவர். நாம் தமிழர் கட்சியில்  18 பேர் அதிகாரமிக்க முக்கிய மாநில பொறுப்பாளர்களில் இத்தனை பேர் ஒரே சமூகம் சார்ந்தவர்கள். 18ல் ஒருவர் கூட ஒடுக்கபட்ட சமூகம் இல்லை. இது சமூக அநீதி என்று செந்தில்குமார் எம்.பி. குறிப்பிட்டிருந்தார்.


அதோடு நில்லாமல், ஒரு உண்மை சொல்லட்டுமா. நீங்கள் (இடும்பவனம் கார்த்திக்) நாம் தமிழர் கட்சியில் இருந்து ஒதுக்கிவைக்கப்படுவீர்கள். சீமான் தம்பிகளை ( இளைஞர்களை ) கைவிட்டு விடுவார் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், ‘தயவு செய்து இந்த டுவிட்டர் பதிவை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் (Plz save this tweet) நிச்சயம் ஒருநாள் நடக்கும் என்று சவால் விடுத்திருந்தார்.

அந்த கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதால்தான் கல்யாணசுந்தரம், ராஜீவ்காந்தி இருவரும் நாம் தமிழரிலிருந்து வெளியேறிவிட்டதாக சொல்லி வரும் நிலையில், இடும்பவனம் கார்த்திக்கும் ஒதுக்கி வைக்கப்படுவார் என்று திமுக எம்.பி. விடுத்திருக்கும் சவாலால்,  நாம் தமிழர் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies