பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருக்கிறார். இன்று காலை 10.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவர், அங்கிருந்து அடையாறில் இருக்கும் ஐ.என்.எஸ் கடற்படை தளத்திற்கு ஹெலிகாப்டரில் சென்றார். அங்கு அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சாலை மார்க்கமாக காரில் பயணிக்கிறார். வழி நெடுகிலும் அவரை காண, கட்சிக் கொடிகளை ஏந்திய படி தொண்டர்கள் வழிமேல் விழி வைத்து காத்துக் கிடக்கும் நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள விழாவில் புதிய மெட்ரோ ரயில் சேவை உட்பட ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை மோடி தொடக்கி வைக்கவிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளின் பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.
அரசு விழாவிலேயே பிரதமர் மோடி, சட்டமன்றத் தேர்தல் கூட்டணிகளை இறுதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


