காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகை குஷ்புவுக்கு கட்சியில் இன்னும் பொறுப்பு வழங்கப்படவில்லை என்றாலும், 2021 சட்டமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு அவருக்கு சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளராக நியமித்தது பாஜக.
வரும் சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் குஷ்பு போட்டியிடவும் வாய்ப்பிருப்பதாகவே தகவல்.
இந்நிலையில், நேற்று சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதி தேர்தல் தொடர்பாக அத்தொகுதியின் நிர்வாகிகளுடன் குஷ்பு ஆலோசனை நடத்தினார். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் இத்தொகுதியில் வெற்றி பெற என்ன செய்யலாம்.
பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடத்தில் விளக்கிச்சொல்வது உள்பட பல்வேறு விசயம் தொடர்பாக இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக்கூட்டம் தொடர்பான புகைப்படங்களை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
Had a brain storming session with my #ChepaukTriplicane constituency co- workers. We discussed various issues, mainly on taking the policies n schemes of @BJP4India to build the lives of the poor who trust @narendramodi ji n his vision. @CTRavi_BJP @Murugan_TNBJP @BJP4TamilNadu pic.twitter.com/s71fQMZScU
— KhushbuSundar ❤️ (@khushsundar) February 12, 2021



