Type Here to Get Search Results !

ஓவியாவை திமுகவிற்கு இழுத்த 'ஐபேக்' நிறுவனம் #Dmk #Oviya

களவாணி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஓவியா. நடிகை ஓவியா மூடர் கூடம், கலகலப்பு, மதயானை கூட்டம், காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். 

இதைத்தொடர்ந்து, பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இயல்பான குணாதிசயம், எதார்த்தத்தை வெளிப்படுத்திய ஓவியாவுக்கு பல்வேறு ஆர்மிகள் தொடங்கப்பட்டன. 


மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சிவப்பு கம்பளம் இட்டு வரவேற்கப்பட்ட ஓவியா, சரியான படங்களை தேர்ந்தெடுக்காததால் மீண்டும் ஓரங்கட்டப்பட்டார்.

பிப்.14.., பிரதமர் மோடி சென்னை வருகையின்போது, ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்ட #GoBackModi என்ற ஹேஷ்டாக் மிகப்பெரிய அளவில் பேசும் பொருளானது. பாஜகவினர் ஓவியாவுக்கு எதிராக போர்க்கொடி பிடித்தனர், பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.


இந்நிலையில், #GoBackModi என்ற ஒரு ட்வீட்டில் மொத்த பாஜகவினரையும் அலறவைத்த ஓவியாவுக்கு, திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. 


திமுகவின் தேர்தல் பணிகளை கவனித்துவரும் ஐபேக் நிறுவனம் ஒரு கோடி சம்பளம் கொடுத்து திமுக பேச்சாளராக ஓவியாவை அமர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies