கொடைக்கானல் பகுதிகளில் மழையினால் சேதமடைந்த சாலையை சீரமைத்த காவல் துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நாயுடுபுரம் அருகே சமீபத்தில் பெய்த கனமழையின காரணமாக சாலைகள் சேதமடைந்து விபத்து ஏற்படும் வகையில் இருந்தது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்படுவதை ஒட்டி, சேதமடைந்த சாலையை கொடைக்கானல் காவல் நிலைய போலீசார் சீரமைக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.
மேலும், உதவி ஆய்வாளர்கள் ரமேஷ் ராஜா, நீலமேகம், முதல் நிலை காவலர் சிவராமன், வடிவேல் மற்றும் காவலர் சந்துரு ஆகியோர் இணைந்து மண்ணை எடுத்து சாலையில் உள்ள குழிகளை மூடி சீரமைத்தனர். காவல்துறையினரின் இந்த செயலை அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வெகுவாக பாராட்டினர்.


