சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக 29.12.2016ல் வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்தநிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா அதிமுகவை மீட்டெடுப்பது குறித்து வழக்கறிஞர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இன்றைக்கு தமிழகம் வந்தும் அதுகுறித்த அடுத்தகட்ட முயற்சிகளை முன்னெடுப்பார் என்று கூறுகிறார்கள்.
இன்று கர்நாடகாவிலிருந்து சென்னை புறப்படுவதற்கு முன்பாக சில அதிமுக எம்.எல்.ஏக்களுடன் வாட்ஸ் அப் காலில் பேசி இருக்கிறார் சசிகலா.
கடந்த ஒருவாரமாகவே தனது உதவியாளர் கார்த்திகேயன் செல்போன் மூலமாக சில அமைச்சர்களை வாட்ஸ் அப் காலில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்.
பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதா பிறந்த தினம் வருகிறது. அதற்குள் ஒரு சுமூக முடிவை எதிர்பார்க்கிறேன். அதற்குள் வரவில்லை என்றால் அதிரடியாக கட்சியை கைப்பற்றிவிட்டு,
பிரச்சாரத்திற்கு கிளம்பிவிடுவே என்றே அவர் பேசிய எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களிடம் சொல்லி இருக்கிறாராம்.






