Type Here to Get Search Results !

சசிகலாவின் அரசியல் என்ட்ரி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ரகசிய ஆலோசனை: என்ன சொல்லியிருப்பார் மோடி?

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நிகழ்ச்சி முடிந்தவுடன், முதல்வர் பழனிசாமியுடன் பிரதமர் நரேந்திர மோடி தனியாக பேசினார்.


அரசு முறை பயணமாக இன்று காலை 10.30 மணிக்கு சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அரசு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அதில், தமிழகத்திற்கு தேவையான ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பிரதமர் மோடியை பொன்னாடை போற்றி வரவேற்ற ஓபிஎஸ்–ஈபிஎஸ் அவருக்கு புத்தகம் ஒன்றையும் சிலை ஒன்றையும் பரிசாக அளித்தனர்.


நிகழ்ச்சியில், பேசிய மோடி, சென்னை வந்ததில் தனக்கு மிக்க மகிழ்ச்சி என்றும் மீனவர்களை நினைத்து தேசம் பெருமை கொள்கிறது என்றும் கூறினார். தமிழக மீனவர்களின் நியாயமான உரிமைகளை மத்திய அரசு உறுதி செய்யும் என்று கூறிய அவர் பாரதியார் மற்றும் ஒளவையாரின் பாடல்களை மேற்கோள் காட்டி பேசினார். பின்னர், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்ஸின் கரங்களை பிடித்து உயர்த்தி ஒற்றுமையை வெளிப்படுத்தினார்.


இந்த நிலையில், நிகழ்ச்சி முடிந்த பிறகு பிரதமர் மோடி முதல்வர் பழனிசாமியிடம் தனியாக பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்தும் சசிகலாவின் அரசியல் என்ட்ரி குறித்தும் அவர் பழனிசாமியிடம் பேசியதாக தெரிகிறது. இது குறித்த தகவல்கள் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies