பெங்களூர் அரசு மருத்துவமனையிலிருந்து சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு ரிசார்ட்டுக்கு செல்ல ஜெயலலிதாவின் காரில் பயணம் செய்தார். அந்தக் காரில் அதிமுகவின் கொடி இருந்தது.
இதைப்பற்றி அவரது ஆதரவாளர்கள் கருத்து கூறுகையில், அதிமுகவைக் கைப்பற்றப் போவதற்கான நாசூக்காகச் சொல்கிறார் சசிகலா என்று கூறினர்.
இந்தநிலையில், தற்போது தமிழக அமைச்சர்கள் தங்கமணி, சிவி.சண்முகம், டி.ஜெயக்குமார் ஆகியோர் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மதுசூதனன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும் டிஜிபி அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.
அதிமுக கொடியை சசிகலா காரில் பயன்படுத்தியதற்கு எதிராக அதிமுக சார்பில் புகாரளித்துள்ளனர்.



