தன் தோழிக்குப் பிடித்தமான விஷயங்களை செய்வது, அவருக்குப் பிடித்தமான நபர்களை நெருக்கத்தில் வைத்துக்கொள்வது என சசிகலா ஒவ்வொரு அசைவிலும் ஜெயலலிதாவைப் பிரதிபலிக்கிறார். இது ஒருவிதமான அரசியலா அல்லது சென்டிமென்டா என்பது அவருக்கே வெளிச்சம்.
சிறுசிறு விஷயங்களில் கூட ஜெயலலிதாவேயே பின்பற்றுகிறார் சசிகலா. ஒருவேளை இதெல்லாம் நிழலாக இருந்த சசிகலாவுக்குப் பிடித்ததால் ஜெயலலிதா செய்ததை, தற்போது அவர் மறைந்த பிறகு அவரின் வாரிசாக சசிகலா வலம்வரத் தொடங்கி விட்டார். தைரியமான பேச்சு எதற்கும் அலட்டிக்காத போக்கு, தனக்கு ஏற்பட்டது துரோகம் என்று தெரிந்தும், எதையும் பொருட்படுத்தாமல் தனக்கேற்றால்போல் லாவகமாக மாற்றுக்கொண்டார்.
ஜெயலலிதாவைப்போல் பச்சை வண்ண புடைவை கட்டுவது, ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அவர் உட்காந்து வணக்கம் சொல்லும்விதம், இரண்டுவிரல்களை காட்டி வலம்வருவது போன்றவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அவருக்கு பாதுகாப்புக்கு படை வீரர்கள் இருந்தாலும், தனக்கென பிரத்யேகமாக மெய்க்காப்பாளர்களை வைத்திருந்தார். கார்டன் சிவா தலைமையிலான 10 மெய்க்காப்பாளர்கள் ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்பு வழங்கிவந்தனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அவர்கள் அப்படியே சசிகலாவின் மெய்க்காப்பாளர்களாக மாறினர். சசிகலா சிறை சென்ற பின் அவர்கள் தழிழகத்தில் இருந்தார்கள். விடுதலையானதும் சசிகலா அழைத்தார். அவர்கள் அனைவரும் பெங்களூரு சென்று சசிகலாவை சூழ்ந்துகொண்டனர். தற்போது அவர்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் தான் சசிகலா இருக்கிறார். இதுவும் ஒரு பெரிய உதாரணம் தான்.
ஆனால், மிக நுணுக்கமான மற்றொன்றையும் பிரதிபலித்திருக்கிறார் சசிகலா. ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் காவலராக இருந்தவர் ராஜன். இவர் ஜெயலலிதா மறைந்த பிறகு எங்கு சென்றார், என்ன ஆனார் என்று தெரியவில்லை.
தற்போது பார்த்தால் சசிகலா வீட்டின் முன்பு காட்சியளிக்கிறார். சாதாரணனாக இல்லாமல் ஒரு காவலராகத் தோன்றியிருக்கிறார் ராஜன்.
இதுபோன்ற நுணுக்கமான அணுகுமுறையில் கூட சசிகலா ஜெயலலிதாவையே பின்பற்றுகிறார் என்பது ஆச்சரியத்தையே அளிக்கிறது.







