ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லடாக், ஜம்மு-காஷ்மீர் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரித்தது. இதுவெறும் டிரெய்லர் தான்.
இனிவரும் காலங்களில் சென்னை, ஹைதராபாத் மற்றும் மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களை யூனியன் பிரதேசமாக அறிவிக்கும் திட்டத்தில் மத்திய அரசிடம் உள்ளதாக மஸ்லீஸ் கட்சித் தலைவர் ஒவைசி லோக்சபாவில் தெரிவித்திருந்தார்.
தற்போது, ஒவைசி குற்றச்சாட்டுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி மறுப்பு தெரிவித்து விளக்கம் அறிவித்துள்ளார். அப்போது பேசிய அமைச்சர் கிஷன் ரெட்டி, மக்களின் கவனத்தை மடைமாற்றுவதற்காக ஒவைசி தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார்.
மேலும், யூனியன் பிரதேச குறித்த கேள்வியைக் கேட்டுவிட்டு எங்கள் தரப்பு வாதத்தைக் கூட கேட்காமல் அவையிலிருந்து வெளியேறிவிட்டார்.
அவர் கூறிய நகரங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. ஒவைசி கூறுவதுபோல், அவற்றை யூனியன் பிரதேசமாக அறிவிக்கும் திட்டம் எங்களிடம் இல்லை என்றார்


