மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்ட தூய்மைப் பணியாளரின் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மதுரை அடுத்த வண்டியூரை சேர்ந்த வேல்முருகன் ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில், இன்று வேல்முருகன் மதுரை ஆட்சியர் அலுவலக மொட்டை மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, தல்லாகுளம் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்று, தமிழகத்தில் பல குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது போல, தற்கொலைகளும் அதிகரித்து வருகிறது. அதிக மனஉளைச்சல் மற்றும் மனஅழுத்தம் காரணமாவே பலரும் தங்கள் உயிரை மாய்த்து கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
இதையடுத்து, தற்கொலை எண்ணங்களை அறவே தவிர்க்க வேண்டும் என்றும், இதுகுறித்து, ஆலோசனை செய்ய வேண்டும் என்று மனநல நிபுணர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


