சென்னையில், 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சென்னை, எம்ஜிஆர் நகரில் வசித்து வரும் 36 வயதான இளம்பெண் ஒருவர், வியாசர்பாடியில் இருக்கும் தனது சகோதரர் வீட்டிற்கு, 10 வயதான மகளை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்.
சிறுமியின் தாய் வீடு திரும்பிய போது சிறுமி அழுது கொண்டே இருந்துள்ளார். அவரிடம் விசாரித்த போது, தாத்தா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியிருக்கிறார். ஆத்திரமடைந்த சிறுமியின் தாய், தனது தந்தை மீது எம்.கே.பி நகர் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறும் காவல் நிலையத்தில் கோரியிருக்கிறார். இதையடுத்து, பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாத்தாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


