மதுரையில், சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த பெண் உள்ளிட்ட இருவரை போலீசார் கைதுசெய்தனர்.
மதுரை மாவட்டத்தில், சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரை, போலீசார் தீவிரமாக கண்காணித்து, கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று மதுரை மாவட்டம் கள்ளிக்குடி காவல்நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சென்னப்பட்டி பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்த பொன்னழகு என்ற பெண்ணை கைதுசெய்தனர். மேலும், அவரிடம் இருந்து 61 பாட்டில்களும் பறிமுதல் செய்யப்ட்டது.
இதேபோல், மதுரை வீரப்பட்டி பேருந்து நிலையம் பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நாகையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்ட ராஜ்குமார் என்பவரை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்த 47 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


