Type Here to Get Search Results !

26ஆம் தேதி செய்தியாளர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்

சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் 26ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திக்கவிருக்கிறார்.



உடல்நலக்குறைவு காரணமாக தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று கடந்த டிசம்பர் மாதம் நடிகர் ரஜினிகாந்த் உறுதியாக தெரிவித்துவிட்டார். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததற்கு ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். அதற்கு பிறகு, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாக வேண்டுமென்று அவரது ரசிகர்கள் போராட்டத்தில் நடத்தினர். 


இதையடுத்து,  தன்னை சங்கடப்படுத்தாதீர்கள் என மீண்டும் அறிக்கை வாயிலாக ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார், இந்த சூழலில் உடல்நலம் தேறிய ரஜினிகாந்த்தை கடந்த சில தினங்களுக்கு முன் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். ரஜினியிடம் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.



இந்நிலையில், வரும் 26ஆம் தேதி ரஜினிகாந்த்- லதா ரஜினிகாந்த்தின் 40 ஆவது திருமண நாள் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, அன்றைய நாளில் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திப்பார் என்றும், செய்தியாளர்களை சந்திப்பார் என்றும் தகவல்கள் தெரிவித்தன. இந்தநிலையில், சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies