Type Here to Get Search Results !

ஜெயலலிதா, கலைஞர் இல்லாமல் வருகிற புதுத் தேர்தல்; எல்லாக் கட்சிக்கும் முதல் தேர்தல் - பிரேமலதா விஜயகாந்த் #Premalatha_Vijayakand #DMDK

ஜெயலலிதா, கலைஞர் இல்லாமல் வருகிற புதுத் தேர்தல்; எல்லாக் கட்சிக்கும் முதல் தேர்தல் - பிரேமலதா



ஜெயலலிதா, கலைஞர் என்று  இருபெரும் தலைவர்கள் இல்லாத நிலையில் வருகின்ற தேர்தல், எல்லா கட்சிகளுக்கும் இந்தத்தேர்தல்   புதுத் தேர்தல்தான், முதல் தேர்தல் தான் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.


மதுரையிலிருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்த பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், ''எங்களது செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவெடுத்த பிறகு தேமுதிக தனது தேர்தல் பிரசாரத்தை துவக்கும். 



இந்தநிலையில், இப்பொழுது  234 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து, ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜெயலலிதா, கலைஞர் என இரு பெரும் தலைவர்கள் இல்லாத வருகின்ற தேர்தல், தமிழகத்தில் உள்ள  எல்லா கட்சிகளுக்கும் புதுத் தேர்தல்தான்-முதல் தேர்தல் தான். எல்லோருக்கும் மிகப்பெரிய சவால்கள் காத்திருக்கின்றன. எனவே இந்த தேர்தல் ஒரு மாற்றமான தேர்தல் தான்.


ஏற்கெனவே நாங்கள் தனியாக தேர்தல் களம் கண்டவர்கள். கட்சி ஆரம்பித்து 16 வருடங்கள் ஆகின்றன. எங்களுக்கு தேர்தல் பிரசாரம் பெரிய விஷயமில்லை. ஆதலால் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி அதன் பின்னர் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவோம்'' என்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies