Type Here to Get Search Results !

சசிகலாவை அதிமுக உதாசீனப்படுத்தினால் 75 தொகுதிகளில் படுதோல்வியடையும் - நீக்கப்பட்ட சுப்பிரமணிய ராஜா பரபரப்பு பேட்டி #ADMK #AMMK #Vengai_Vetri

சசிகலாவை வரவேற்று திருநெல்வேலியில் சுவரொட்டிகள் ஒட்டிய திருநெல்வேலி மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்பிரமணிய ராஜா, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.



பெங்களூரு சிறையிலிருந்து சசிகலா விடுதலையாகியுள்ள நிலையில், அவரை வரவேற்கும் விதமாக திருநெல்வேலி மாநரகம் முழுவதும் எம்ஜிஆர் மாவட்ட இணைச் செயலாளர் சுப்பிரமணிய ராஜா சுவரொட்டிகளை ஒட்டியிருந்தார். அதில், அதிமுகவை வழிநடத்த வரும் பொதுச்செயலாளர் சசிகலா எனக் குறிப்பிட்டிருந்தார்.


இதையடுத்து, அவரை அதிமுகவிலிருந்து நீக்கி கட்சியின் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கழகத்தின் கொள்கை குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் திருநெல்வேலி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்ரமணியராஜா இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.



ஆதலால், இவருடன் கழக உடன் பிறப்புகள் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.


இந்த நிலையில், இதுகுறித்து பேசிய சுப்பிரமணிய ராஜா, சசிகலாவை உதாசீனப்படுத்தினால் தென் மாவட்டங்களில் மொத்தமாக 75 தொகுதிகளில் அதிமுக படுதோல்வியடையும் என்று கூறினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies