பொள்ளாச்சி, டிச.15
ஆனைமலை அருகே கேரளாவிற்கு சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற 5 டன் ரேசன் அரிசியை ஆனைமலை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ஆனைமலை வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக ஆனைமலை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை சேத்துமடை அருகே காவல் உதவி ஆய்வாளர்கள் உதயச்சந்திரன், கருப்புசாமி பாண்டியன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சந்திரன் தலைமையிலான போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது அதில் 5 டன் ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, சரக்கு வாகனத்தை ஓட்டிவந்த ஆனைமலை-தாத்தூரைச் சேர்ந்த ஜெகநாதன்(34) கைது செய்யப்பட்டார். ரேசன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.
