Type Here to Get Search Results !

பெண் உரிமை போராளி மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே நினைவு நாள்

 நவம்பர் 28 மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே நினைவு நாள்

 Mahatma Jyotirao Govindrao Phule 

இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் வாழ்ந்த ஒரு சமூக சீர்திருத்தவாதி. சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததோடு அவற்றைக் களையும் முயற்சிகளிலும் இறங்கியவர். ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண்களுக்கென்று பள்ளிகளை நடத்தியவர்.

ஆங்கிலேயர் ஆட்சியை விரும்பியவர்களுள் இவரும் ஒருவர். 1857 சிப்பாய்க் கலகத்தை இவர் உயர் சாதி இந்துக்கள் உண்டாக்கிய கலகமாகவே பார்த்தார்.

1873 ஆம் ஆண்டு தனது ஆதரவாளர்களுடன் இணைந்து இவர் சத்ய சோதக் சமாஜம் (பொருள்: உண்மையைத் தேடுவோரின் சமூகம்) எனும் அமைப்பைத் துவங்கினார். ஆனால் இவரது மறைவுக்குப் பின் இந்த இயக்கம் காங்கிரசுடன் கரைந்தது.

அக்கால வழக்கப்படி இவர்தன் 13 ஆம் அகவையில் சாவித்ரிபாய் (9 அகவை) அவர்களுடன் 1840இல் திருமணம் நடந்தது. ஜோதிராவ் புலே அவர்கள் தனது துணைவி சாவித்ரிபாய் புலே அவர்களைச் சாதீய, பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஒரு பிராமண விதவையின் யஸ்வந்த் ராவ் என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர்.

மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் வாழ்ந்த சமூக சீர்திருத்தவாதி. சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததோடு அவற்றைக் களையும் முயற்சிகளிலும் இறங்கியவர். ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண்களுக்கென்று பள்ளிகளை நடத்தியவர்.


பெண் உரிமை போராளி

மனுதர்மம் எல்லாப் பெண்களையும், சாதி வித்தியாசம் பாராமல் அடிமைகளாக (தாஸா) அல்லது சூத்திரர்களாக நடத்துகிறது. சூத்திராதி சூத்திரர்கள் என்ற தனது கணிப்பில் பெண்களையும் புலே இணைத்தார். 1842 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கான அவரது முதல் பள்ளிக் கூடத்திற்கு சமூக அந்தஸ்து கிடைக்கவில்லை. 

குழந்தைகளைக் கருவிலேயே கலைக்க வேண்டிய நிலையிலோ அல்லது பிறந்த பின் அவற்றைக் கொல்ல வேண்டிய நிலையிலோ உள்ள விதவைப் பெண்களுக்கான இல்லத்தை 1863 ஆம் ஆண்டில் நிறுவினார். 1864 ஆம் ஆண்டில் நடைபெற்ற சாரஸ்வத் பிராமண விதவையின் மறுமணத்தில் முக்கியப் பங்கு புலேயினுடையது. 1882 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பெண் விடுதலை பற்றிய தவறான கருத்துக்களைக் கொண்ட ஆய்வுக் கட்டுரையான, ஆண் பெண் பற்றிய ஒப்பீடு (ஸ்திரீ புருஷ்துலானா) என்பதை எதிர்த்து குரல் கொடுத்தவர் புலே ஆவார்.


இந்திய அஞ்சல் துறையினர் 25 பைசா மதிப்பில் மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலேவிற்கு அஞ்சல் தலை வெளியிட்டது.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies