Type Here to Get Search Results !

இந்திய அரசியலமைப்பு தினம் நவம்பர் 26

 நவம்பர் 26

இந்திய அரசியலமைப்பு தினம் 



இந்திய அரசியல் சாசன தினம் அல்லது இந்திய அரசியலமைப்பு நாள் (Constitution Day Of India) எனப்படும் இந்நாள், 2015 நவம்பர் 26 ஆம் திகதியன்று முதல் முறையாக  அனுசரிக்கப்படுவதாகவும். மேலும் இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26 ஆம் நாளை, அரசியலமைப்பு தினமாக, கொண்டாடப்படுவதாக அறியப்படுகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் துவக்கம்

இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுவின் தலைவராக செயற்பட்ட டாக்டர் அம்பேத்கர்[ என்பவரை கௌரவிக்கும் விதமாகவும், நினைவுகூரும் வகையிலும் மற்றும் இந்திய அரசியலமைப்புக்காக அயாரதுழைத்த அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாகவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையில் உள்ள இந்திய அரசால் 2015 ஆம் ஆண்டு, நவம்பர் 26 இல் அரசியல் சாசன தினம் துவக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.


வரலாறு


தெற்கு ஆசியா நாடான இந்தியாவின் பெரும்பகுதி 1858 லிருந்து 1947 வரையில் ஆங்கிலேயர்கள் காலனித்துவ ஆட்சிக்கு கீழ் இருந்துள்ளது. இக்காலகட்டத்தில், ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலைப்பெற இந்திய சுதந்திர இயக்கம் படிப்படியாக முயன்று வெற்றியை ஈட்டியது. 1934 ஆம் ஆண்டுவாக்கில் இந்திய நாட்டிற்கு அரசியல் நிர்ணயசபை அமைக்க ஒரு கோரிக்கை முனவைக்கப்பட்டது. பிறகு 1936 இலும், மற்றும் 1939-லும் இருமுறை இக்கோரிக்கையை பற்றி வலியுறத்தப்பட்டன. அதன்படி 1942 ஆம் ஆண்டு மார்ச் இல் கிரிப்ஸ் தூதுக்குழு அரசியல் நிர்ணய சபையை உருவாக்க பரிந்துரைக்கப்பட்டது. அதன்பின்பு 1946 மே இல் அரசியல் நிர்ணய சபை ஏற்பத்த பரிந்துரைக்கப்பட்டு, 1946 சூலையில் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடைபெற்றது 1946 திசம்பர் 11 இல் அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு அச்சபையின் தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்வு செய்யப்பட்டார்.


1947 ஆகத்து 15 க்கு (விடுதலைக்கு) பின்பு, பிரித்தானியாவின் இந்தியா, இந்திய மாகாணம், பாக்கித்தான் மாகாணம் என இருவேறு பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டு சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச்சாசனத்தை, உருவாக்கும் பணியை அரசியல் நிர்ணயசபை குழு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.


1949-ஆம் ஆண்டு இந்திய அரசியல் நிர்ணய சபையால் வகுக்கப்பட்ட சட்டங்கள் ஏற்று கொள்ளப்பட்டதை கெளரவப்படுத்தும் விதமாக அரசியலமைப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை சிறப்பிக்க இந்திய அஞ்சல்துறை 2015-ஆம் ஆண்டு 5-ரூபாய் மதிப்புள்ள அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது.


வரலாற்றில் நவம்பர் 26

இந்திய அரசியலமைப்பு தினம் குறித்து திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் எடுத்துரைத்தார்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies