Type Here to Get Search Results !

சாத்தான் குளம் இரட்டை கொலை வழக்கு !! திடீரென ஸ்ரீதர் மருத்துவமனையில் அனுமதி !!

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு இப்போது சிபிஐ விசாரணையில் இருக்கிறது. வழக்கில் சிபிஐ முதலில் கைது செய்த ஸ்ரீதர் உள்பட 5 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.



நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது ஸ்ரீதர் முதுகு பின்தண்டுவடத்தில் வலி இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்க நீதிபதியிடம் கோரினார். அப்போது , சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிக்சை பெறலாம் என்று நீதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



இந்நிலையில், ஸ்ரீதருக்கு மீண்டும் தண்டுவடத்தில் கடுமையான வலி ஏற்பட்டதாக தெரிகிறது. ஆகையால் மதுரை ராஜாஜி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனை , மருத்துவர்களின் அறிக்கைக்கு பிறகே அவர் சிகிச்சையில் இருப்பாரா ? அல்லது சிறைக்கு அனுப்பப்படுவாரா என்பது தெரிய வரும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies