ரஜினியின் அண்ணாத்த படத்தில் முக்கிய ரோலில் நடிகர் அர்ஜெய் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
![]() |
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் |
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் அண்ணாத்த. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இதில் ரஜினியின் தங்கையாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார் என கூறப்படுகிறது. மேலும் நயன்தாரா, மீனா, குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சதிஷ், சூரி, ஜார்ஜ் மரியான் உட்பட பலர் முக்கிய ரோல்களில் நடித்து வருகின்றனர்.
கொரோனா முழு ஊரடங்கு போடப்படுவதற்கு முன்பு இந்த படத்தின் ஷூட்டிங்கில் நடிகர் மற்றும் எழுத்தாளர் வேலா ராமமூர்த்தி இணைந்திருந்தார். அவர் ரஜினி உடன் இருக்கும் புகைப்படமும் வெளியாகி வைரலாகி இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது பிரபல பிரபல நடிகர் அர்ஜெய் அண்ணாத்த படத்தில் இணைந்துள்ளார். அவர் இதற்கு முன்பு பாயும் புலி, தெறி, சண்டக் கோழி-2, தேவி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். அண்ணாத்த படத்தில் நடிப்பதாக அவர் ட்விட்டரில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது..
"நான் அர்ஜெய். என்னுடைய பிறப்பிடம் பழனியில் நான் சிறுவயதில் வியந்து பார்த்த இரண்டு பிரம்மிப்புகள் :-
1. அருள்மிகு தண்டாயுதபாணி முருகன்
2. ருத்திராட்சம்
பழனி என்றால் முருகன் தான், ஆனால் ருத்திராட்சம் அணிந்த பெரும்பாலானோரின் ஈர்ப்பு தலைவர் ரஜினிகாந்த். அப்படிப்பட்ட மனிதரை நான் சினிமாவிற்காக சென்னையில் காலடிவைத்த நாள் முதல்
பார்க்க முடியாத தூரத்தில் இருந்து பார்த்து ரசித்து உள்ளேன். அந்த மாமனிதரை பார்த்து, தொட்டு, ரசிக்க பழனி அருள்மிகு தண்டாயுதபாணி முருகன் அருளால் கிடைத்த வாய்ப்பு அண்ணாத்த.
கொரோனா லாக் டவுன் போடப்படுவதற்கு முன்பு வரை அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. முதல் கட்ட ஷூட்டிங் நிறைவு பெற்ற நிலையில் கொரோனா வைரஸ் அதிகம் பரவத் துவங்கியதால் ஷூட்டிங் மீண்டும் துவங்காமலேயே இருக்கிறது. நாடு முழுவதும் திரைப்பட ஷுட்டிங் நடத்த தடை மற்றும் கட்டுப்பாடுகள் அதிக அளவில் இருக்கும் சூழ்நிலையில் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் எப்போது துவங்கும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
முதலில் இந்த வருடம் தீபாவளிக்கு அண்ணாத்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு பிறகு கொரோனா லாக் டவுன் நேரத்தில் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போதும் ஷூட்டிங் தொடங்க முடியாத சூழ்நிலை இருப்பதால் பொங்கல் ரிலீஸில் இருந்தும் அந்த படம் தள்ளிப் போக வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.
சிறுத்தை சிவா கடைசி படமான விசுவாசம் குடும்ப ரசிகர்களை மிக அதிகளவில் கவர்ந்த நிலையில் அண்ணாத்த படத்தில் அதேபோல குடும்ப ரசிகர்களை கவரும் சென்டிமெண்ட் காட்சிகள் அதிகம் இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் இந்த படம் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது