தமிழகம் விரைவில் இயல்புநிலைக்கு திரும்ப மாஸ்க், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் என்று முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘சென்னையில் கொரோனா பணியில் 20,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நியாய விலைக்கடைகளில் தொடர்ந்து இலவச அரிசி வழங்கப்பட்டுவருகிறது. தமிழகத்தில் 1,196 நடமாடும் வாகனங்கள் மூலம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களை சோதனை செய்ததன் மூலம் கொரோனா கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 50 சதவீதப் பணியாளர்களுடன் தொழிற்சாலைகள் இயங்கலாம் என்று கோரிக்கைவைக்கப்பட்டது. அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் 10சதவீதப் பணியாளர்களுடன் தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுக்குச் சென்ற தொழிலாளர்கள் மீண்டும் தமிழக வர விரும்புகிறார்கள். அதற்கு தேவையான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தற்போது, 57,000 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர். அம்மாவின் அரசின் நடவடிக்கை காரணமாக இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. நாளொன்றுக்கு 63,000 பேருக்கு தினசரி செய்யப்படுகிறது. மக்கள் விரும்புவதை அரசு தொடர்ந்து செய்கிறது. மழை காலத்தில் யெய்யும் நீரைச் சேமிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை.. மக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.
பொதுமக்கள் வெளியே செல்லும்போது கண்டிப்பாக முகக் கவசம் அணியவேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றவேண்டும்.வீட்டை சுத்தமாக வைக்கவேண்டும். தமிழகம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.