Type Here to Get Search Results !

தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

 தமிழகத்தில்  22 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!



வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருச்சி, கோவை, குமரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



சென்னை அக் 21.,


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (அக். 21) நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருநெல்வேலி, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


இதனைத் தொடர்ந்து ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


அடுத்த 2 நாள்களுக்கு மழை நிலவரம்


அக்டோபர் 23: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய உள் மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


அக்டோபர் 24: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய உள் மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


வானிலை


அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்.



ஒருசில நகர் பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும்.  அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


பருவக்காற்று


வங்கக் கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் அக்டோபர் 26 முதல் வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.இந்நிலையில் தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து விலகி வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் எதிர்வரும் அக்டோபர் 26 ஒட்டி தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies