Type Here to Get Search Results !

வீதி நூலகங்கள் துவக்க விழா

டாஸ்அறக்கட்டளை மற்றும் திருச்சி கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இணைந்து கள்ளிக்குடி ஊராட்சி வடக்கு தெரு மற்றும் தெற்கு தெருவில் வீதிநூலகம் தொடக்க விழா நடைபெற்றது.


திருச்சிராப்பள்ளி மணிகண்டம் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் தலைமை வகித்து பேசுகையில், கொரொனா பெருந்தொற்று காரணத்தால் தமிழக அரசு  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.  

 விடுமுறை கலங்களில் பள்ளிக்குழந்தைகள் படிக்கும் வகையில் அவர்கள் வாழ்விடங்களின் அருகிலேயே வீதி நூலகம் அமைத்து படிப்பதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளோம். வீதி நூலகத்தை தொடர்ந்து பயன்படுத்தும் வாசகர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும் என்றார்.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திலகம் முன்னிலை வகித்தார். கள்ளிக்குடி ஊராட்சி தலைவர் கே.எஸ். சுந்தரம் தெற்குத் தெரு நூலகத்தையும் , வடக்குத்தெரு நூலகத்தை புத்தக நன்கொடையாளர்களும் தொடங்கி வைத்தனர்.   

விழாவில் வீதி நூலகங்களுக்கு திருச்சி மலைக்கோட்டை இன்னர் வீல் கிளப், புவனா, பிரேம்குமார், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சோபியா, துர்காதேவி,    ஸ்வர்ண லட்சுமி, யுவராஜ், தாரணி, ராஜ்குமார் உட்பட பலர்  வீதி நூலகங்களுக்கு புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார்கள்.

முன்னதாக டாஸ் அறக்கட்டளை திருச்சி மாவட்ட செயலாளர் விக்னேஷ் வரவேற்க விழா ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ பாலாஜி நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies