ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு உள்ள சிக்கல்களைக் களைவதற்காக அவரின் வருமான வரி நிலுவைத் தொகையை அரசு செலுத்தியது என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
![]() |
| மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் |
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை மாதவரம் காய்ச்சல் முகாமில் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வரின் அறிவுறுத்தலின் படி சுகாதார துறை, மாநகராட்சி, காவல்துறை இணைந்து சிறப்பாக பணியாற்றி வருகின்ற நிலையில், சென்னையில் கொரோனா தொற்று விரைவாக குறைந்து வருகிறது.
சென்னையைப் பொருத்த வரை சமநிலைக்கு வர கூடிய நிலையை விரைவில் எட்டும். எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை.
சென்னையில் 16 ஆயிரத்திற்கு மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதனால் கொரொனா தொற்றால் பாதிக்கப்படவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது தொடர்பாக மேல்முறையீடு செய்ய உள்ளதாக தீபா கூறியது குறித்த கேள்விக்கு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஒரு பெரும் தலைவர். அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படுவது போற்றத்தக்கது. தொண்டர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் இ பாஸ் வாங்காமல் பயணம் செய்தது குறித்த கேள்விக்கு, நடிகர் ரஜினிகாந்திற்கு அபராதம் விதித்திருப்பது யார் தவறு செய்தாலும் சட்டம் முறையான நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதற்கு உதாரணம். தவறு யார் செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஓட்டுக்காக இவ்வாறான செயல்களில் இடுபடுபது தவறு. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் மற்றும் எம்.ஜி..ஆரின் ரசிகர்கள் இதை பொருத்து கொள்ள மாட்டார்கள். யார் சீண்டினாலும் விளைவுகள் பெரிதாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஜெயலலிதா ஒரு போற்றுதலுக்கு உரிய தலைவர் அவர் வசித்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு ஏற்படும் சிக்கல்களை களைய வேண்டியது அரசின் கடமை என கூறினார்.


