பனைமரம் ஒரு தாவரப் பேரினம்
![]() |
பசுமை நிறைந்த பனைமரம் |
பனைமரம் (Borassus flabellifer)
பனை (Palmyra Palm), புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு (borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.
தற்போது ஏற்பட்ட இயற்கைச்சீற்றமான கஜா என்னும் புயலால் கடற்கரையோர மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்றவற்றில் பல்லாயிரக்கணக்கான பலவகையான மரங்கள் காற்றினால் வேரோடு சாய்ந்துவிட்டன. ஆனால் பனைமரங்கள் அதிகளவு பாதிப்பிற்கு உள்ளாகாமல் தப்பித்துள்ளன.
100 கிளைகள் கொண்ட பனைமரம் |
எனவேதான் நமது முன்னோர்கள் பல இடங்களிலும் அதாவது ஏரிக்கரை, குளக்கரை மற்றும் கடற்கரை ஓரங்களில் பனைமரங்களை நட்டு வளர்த்தனர். அதன் பயன்கள் எண்ணற்றவை. கடல் அ்ரிப்பு மற்றும் மண்அரிப்பு போன்றவை ஏற்படாதவாறு அரணாக நின்று இயற்கையை சமநிலையில் வைத்துக்கொண்டிருந்தன. ஆனால் காலப்போக்கில் நாம் அதன் மகத்துவம் தெரியாமல் அவற்றை வீண் எனக்கருதி வெட்டி சாய்த்ததால் இன்று ஏராளமான சேதத்தை எதிர்கொள்ளவேண்டியதாயிற்று.
பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலேயே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகள் கிடையாது. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 – 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.
![]() |
பனையில் இருந்து கிடைக்கும் சத்து பொருட்கள் |
தமிழ்நாட்டின் மாநில மரம் பனைமரமாகும். இதன் அறிவியல் பெயர் பொராசஸ் பிலாபெல்லிபர் ஆகும். தற்போது இம்மாநில மரமானது அழிந்து வரும் பாரம்பரியங்களில் ஒன்றாக வருகிறது. இதற்கு காரணம் இதன் நன்மைகளை நாம் அறியாததேயாகும்.
பனைமரத்திலிருந்து கிடைக்கும் பனை நுங்கு நன்மைகள் பல தரக்கூடியது ஆகும். தமிழ்நாட்டின் மாநிலமரமாக இருக்கும் இம்மரத்தை இத்தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அறியாமல் இருந்தாலும் அதிலிருந்து கிடைக்கும் பனை நுங்கு ஆரோக்கியத்திற்கு ஏராளமான பலன்களைத்தருகிறது.
7 கிளைகள் கொண்ட பனைமரம் |
![]() |
பூத்திருக்கும் பனை மரம் |
வெயில் காலசூட்டிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நமக்கு இயற்கை தந்த வரம்தான் பனைநுங்கு. கோடைகாலத்தில் அனைவரும் குளிர்ச்சியை நாடுவோம். நம் உடலுக்கு தேவையான நீர் சத்துக்களை வாரி வழங்குகிறது பனை நுங்கு.
பனைவெள்ளம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, பனம்பழம் என அனைத்துமே மருத்துவகுணம் நிறைந்தவை. பனை நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி மற்றும் சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், டையமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது.
பனை நுங்கிற்கு கொழுப்பைக்கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பனை நுங்கை சாப்பிடலாம். பனை நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டுவதோடு மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டிற்குமே பனை நுங்கு மருந்தாக பயன்படுகிறது. உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் கு்டித்தாலும் தாகம் அடங்காது. பனை நுங்கை சாப்பிட்டால் அவர்கள் தாகம் அடங்கும்.
இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்லமருந்தாகும். நுங்கில் காணப்படும் ஆந்த்யூசைன் எனும் இரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும் சக்திகொண்டது. நுங்கு வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக்கும். இப்படி பல நன்மைகளை நமக்கு அள்ளித்தருகிறது பனை நுங்கு.
![]() |
நுங்கு |
பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு. தமிழில் உள்ள மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் புல், மரம் என்பவற்றுக்கு இடையேயான வேறுபாட்டைப் பின்வருமாறு வரையறை செய்கிறது.
புறக் காழனவே புல்லெனப் படுமே (பாடல் 630)
அகக் காழனவே மரமெனப் படுமே (பாடல் 631)
பலவகையான பயன்களை நெடுங்காலத்துக்குத் தருவதால் பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர்.
இத்தகைய ஆற்றல் கொண்ட இம்மாநில மரத்தை பாதுகாத்து இயற்கையை காப்போம் நம் வருங்கால சந்ததியினரை காப்போம்.