Type Here to Get Search Results !

அந்த சிரிப்பு இருக்கே! சிரிப்பு... ஈபிஎஸ் புகழ் பாடிய நமது அம்மா!

கலக்கப்போவது முதல்வர் 
கதிகலங்கிப்போவது கொரோனா 
என்ற தலைப்பில் நமது அம்மா நாளிதழில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. 



நாடு முழுவதும் கொரோனா தலைவிரித்தாடி வருகிறது. இதற்கு தமிழகமும் விதிவிளக்கல்ல. ஆம், தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு நேர்று ஒரே நாளில் 3,713 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  
 
இதனைத்தொடர்ந்து மொத்தபாதிப்பு 78,335 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கலக்கப்போவது முதல்வர் கதிகலங்கிப்போவது கொரோனா என்ற தலைப்பில் நமது அம்மா நாளிதழில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.  அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருப்பவை சில பின்வருமாறு... 
 
கொரோனாவுக்கு ஒரே மருந்து விழித்திரு, தனித்திரு, வீட்டிலிரு என்பதுதான். ஆனால் இதற்கு மற்றொரு மருந்து, தமிழக முதல்வரின் புன்னகை, தெளிவு, விடாமுயற்சி, தைரியம், மாவட்ட ஆட்சியர்கள், வல்லுநர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோரை உற்சாகப்படுத்தும் அவரது திறமையின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. 
 
அவரது கண் துஞ்சா சேவையில் கொரோனாவிடம் இருந்து தங்களை காப்பாற்றி விடுவார் என்ற உன்னதமான எண்ணம், கொரோனாவின் முடிவு கடவுளுக்குத்தான் தெரியும் என முதல்வர் சொன்னாலும், கடவுளின் வடிவில் முத்ல்வரைதான் மக்கள் பார்க்கிறார்கள் என அந்த கட்டுரை நீள்கிறது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies