Type Here to Get Search Results !

தொழில் முனைவோர், தொழில் வளர்ச்சி

12. காரணங்களை அறிந்து கொள். ஒரு சிறு தொழில் தோல்விக்கு வழக்கமாக நிதிநிலைமைகள் காரணங்களாகின்றன. 

துரதிருஷ்டவசமாக, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற பல காரணிகளும் இந்த வியாபார வீழ்ச்சிக்குக் காரணமாக அமைகின்றன. அதிர்ஷ்டவசமாக, பெருமளவில் உங்கள் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்கின்ற திடமான நேர் படிமுறைகள் (positive step) இருக்கிறது.

1. உங்கள் பலவீனங்களுக்கு முகம் கொடுத்தல் (Face Your Weaknesses): உங்கள் பலவீனங்களை இனம் கண்டு அவற்றை எதிர் நோக்குதல் மற்றும் உங்களிடத்தில் இயல்பாகக் காணப்படுகின்ற பலங்களைப் பயன்படுத்திக் கொள்ள போதிய முயற்சி இன்மை போன்றவை உங்கள் வணிகத்தின் வளர்ச்சியின்மைக்கு அடிப்படையான காரணியாகும். இரண்டு காகிதத் துண்டுகளை எடுத்து ஒன்றில் உங்கள் நிறுவனத்தின் பலம் மற்றையதில் அதனுடைய பலவீனங்கள் அல்லது குறைகளைப் பட்டியல் இடுங்கள். நீங்கள் உங்கள் நிறுவனத்தின் வலிமைகளை, உங்கள் ஒவ்வொரு பணியாளர்கள், வாடிக்கையாளர்கள்,வாடிக்கையாளராகக் கூடிய வாய்ப்புக்கள், மற்றும் பிற வணிக நிறுவனங்களுக்குத் தெளிவுபடுத்தும் வழிகளில் இருக்க வேண்டியதைக் கவனிக்கவும். பலவீனங்களைக் குறிப்பிட்ட துண்டில், ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வாகக் கூடிய சரியான படிமுறைகளைக் கண்டறியுங்கள். பின்னர் உங்கள் பணியாளர்களுடன் நீங்கள் எடுத்த குறிப்புகளைக் கலந்தாலோசித்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான கால அட்டவணையை உருவாக்குதல் வேண்டும்.

2. நடவடிக்கை எடுத்தல் (Take Action): உங்களால் விருத்தி செய்யப்பட்டுத் தொடரப்படும் ஒரு பெரிய சந்தைப்படுத்தல் நிகழச்சித்திட்டமானது இரு வேறுபட்ட நடவடிக்கைகளைக் கொண்டது. இந்நிகழ்ச்சி திட்டத்தை அமுல்படுத்துதல் என்பது சந்தைப்படுத்தலின் வெற்றிக்கு மிக முக்கியமான திறவுகோலாகும். நீங்கள் விரும்பும் அனைத்தையும் திட்டமிடுக, ஆனால் இதனைச் செயற்படுத்த, உங்களால் இனம் காணப்பட்ட படிமுறைக்கமைவாகவே உங்களைத் தயார் செய்யுங்கள். அவ்வாறு செய்கையில், ஆரம்பத்தில் நீங்கள் கருத்தில் எடுக்க முடியாத என்ற சில படிமுறைகளைக் கண்டு ஆச்சரியப்பட வேண்டாம்.

3.பதில் கூறும் கடப்பாடும் பொறுப்பும் (Accountability and Responsibility): பதில் கூறும் கடப்பாடு மற்றும் பொறுப்பு இவை இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை முதலில் புரிந்து கொள்ளுதல் வேண்டும். உங்கள் பணியாளர்களும் விநியோகித்தார்களும் உணர்ந்து பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் அவர்கள் உங்களுக்கும் நிறுவனத்திற்கும் பதில் கூறும் நிலைமைக்கு ஆளாகின்றார்கள். அது இப்போது அவர்களுடைய வேலை எனவே, அது அவர்கள் முடிக்க வேண்டிய பணியாகிவிடுகின்றது.

4.வியாபாரத்தில் விளையாடல் ஆகாது (Don’t Play At Business) வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் இதனை ஒரு விளையாட்டாக எண்ண வேண்டாம். ஏனெனில் இது ஒரு பொழுதுபோக்கு அல்லது நேரத்தைக் கடத்துவதற்குரிய விடயமல்ல. நீங்கள், உங்கள் பணியாளர்கள், விநியோகித்தவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு செய்தியைக் கொடுப்பதாகச் சிந்தியுங்கள். வாடிக்கையாளருக்கும் வணிக நிறுவனத்தின் வெற்றிக்கும் ஒரு உண்மையான அர்ப்பணிப்புடன் செயற்படின் அது கடினமான அல்லது கஷ்டமான வேளைகளிலும் தொடரக் கூடியதாக இருக்கும். இது வருங்காலத்தில் நிறுவனத்தின் வெற்றிக்கு இட்டுச் செல்லக்கூடியதாக இருக்கும்.

5. முன் திட்டமிடப்படாத சந்தைப்படுத்தலைத்தவிர்த்தல் (Avoid Ad Hoc Marketing) முழுமையான சந்தைப்படுத்தல் பற்றிய திட்டமின்றி தொடங்கப்படும் எந்தவொரு வர்த்தகமும் வெற்றி பெறாது. எனவே ஓர் ஆண்டுக்குரிய சந்தைப்படுத்தல் திட்டத்தைத் தயார் செய்து அல்லது குறைந்தபட்சம் ஒரு முழுமையான பருவத்திற்குரிய திட்டத்தையேனும் தயாரித்து நடைமுறைப்படுத்துதல் தொடர்ச்சியான வெற்றிப் பாதையில் வணிகத்தை இட்டுச் செல்ல உதவும். இதற்காக முந்தைய முயற்சிகளின் படிப்பினையையும் எடுத்துக் கொள்ளல் சிறந்தது.

6. மாற்றங்களுக்கு ஒத்துழைக்க பணியாளரை நாடுதல்: உங்கள் பணியாளர்கள் உங்கள் சந்தைப்படுத்தல் திட்டத்திற்கு ஆதரிக்காத போது, உங்கள் நிறுவனத்தின் பயணம் தோல்வியில் நிறைவடையும். எனவே ஆரம்ப திட்டமிடல் செயல்பாட்டில் பணியாளர்களின் கருத்துகளை உள்வாங்கி திட்டத்தில் இணைப்பதன் மூலம் அவர்களின் பூரண ஒத்துழைப்பைப் பெற முடியும். இந்த நடவடிக்கைக்கு உங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரும் பொறுப்பானவர்கள் என்பதனால் திட்டத்தின் அனைத்துப் பகுதிகளையும் எல்லோரும் தெளிவாக அறிந்திருக்க வேண்டியதை உறுதி செய்தல் வேண்டும்.

7. வாடிக்கையாளரை மதித்தல் (Appreciate Every Customer): வாடிக்கையாளர் மீதான ஒரு முழுமையான அலட்சியம் ஒரு வணிகம் வீழ்ச்சியுறுவதற்கான ஒரு நிச்சயமான அறிகுறியாகும். எனவே வாடிக்கையாளரைக் கவனிக்காது தனிப்பட்ட தொலைபேசி உரையாடலை அல்லது பத்திரிக்கை போன்றவற்றை வாசித்தலைத் தவிர்த்து உடனடியாக அவர்களை வரவேற்று, தேவைகளைக் கவனித்தல் வியாபாரத்துக்கு நன்று.

8. சந்தை நிலவரங்களை உற்றுநோக்குதல் (Spot Trends): சந்தையில் ஏற்படுகின்ற மாற்றங்கள், தவறுகள், அதன் போக்கு போன்றவற்றை உன்னிப்பாக அவதானித்து உங்கள் நிறுவனத்தின் பொருட்கள் அல்லது சேவைகளில் ஏற்படுத்துகின்றனர் மாற்றங்கள் ஒரு புதிய போக்கை (trend) உங்கள் வியாபாரத்தில் உருவாக்கும். இது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல சந்தை வாய்ப்பை ஏற்படுத்த ஏதுவாகும். அத்துடன் புதிய புதிய யோசனைகள் உங்கள் ஊழியர்களுக்கும் உற்சாகத்தைக் கொடுக்கும்.

9. அகங்காரம் இருத்தல் கூடாது (No Egos) புதிய புதிய எண்ணங்கள், கருத்துக்கள் எப்பொழுதும் எல்லோரிடத்திலும் ஏற்படுவதில்லை. எனவே உங்கள் நிறுவனத்தை ஒரு வரையறைக்குள் வைத்திருக்காது விரிவுபடுத்துதற்குச் சிறந்த ஆலோசனைகளை எந்த மட்டத்திலிருந்தும் பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்காக உங்களிடத்திலிருக்கும் அகந்தையைத் தவிர்த்தல் வேண்டும்.

10. நீங்கள் வணிகம் தொடர்பாக அனைத்து விடயங்களும் அறிந்தவரல்ல (You Don’t Know It All): உங்களால் முன்வைக்கப்படும் அனைத்து முன் யோசனைகளும் சரியானவை என்ற உத்தேசத்தின்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies