தமிழகத்தில் மின்னலாய் பரவும் கொரோனா
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவுவதால் பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று (ஜூன் 27) இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், தமிழகத்தில் மொத்த பாதிப்பும் 78,335 ஆக அதிகரித்தது. இன்றும் பல மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து 3 நாட்களாக 3,500 என்ற நிலையை கடக்க இருக்கிறது.
இன்று மதுரை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2,003 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டில் இன்று மேலும் 162 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 5073 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல், திருவள்ளூரில் மேலும் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலூரில் 88 பேரும், கடலூரில் 35 பேரும், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள பலசரக்கு கடை ஒன்றில் பணிபுரிந்த 17 பேரும் இன்று புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.