மன் கீ பாத் எனும் வானொலி நிகழ்ச்சியில் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாளில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு மோடி உரையாற்றி வருகிறார். அப்போது அவர் கூறுகையில்,
ஆண்டின் முதல் பாதி நாட்கள் இப்படி இருக்கிறது என்பதற்காக இனி வரும் நாட்களும் அப்படி இருக்கும் என்றில்லை. எத்தனை துன்பங்கள் வந்தாலும் 2020 ஆம் ஆண்டை மோசமான ஆண்டாக நினைகாதீர்கள்.
கொரோனா பரவல் எப்போது முடியும் என்பதுதான் மக்கள் பலரும் பேசும் விஷயமாக இருக்கிறது.இந்த ஆண்டு இந்தியா பல்வேறு சவால்களைச் சந்தித்துள்ளது.
பூகம்பம், புயல், வெட்டுக்கிளிகள் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.இந்தியா எப்போதும் தனக்கான பிரச்சினைகளை வாய்ப்புகளாக மாற்றியுள்ளது
உயிரிழந்த ராணுவ வீரர்களை நினைத்து ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்கிறது.நமது இறையாண்மை மற்றும் எல்லையை பாதுகாப்பதில் இந்தியா உறுதி பூண்டுள்ளது. நமது நாட்டுடன் யாரும் மோத முடியாது - லடாக் எல்லையில் சரியான பதிலடியை கொடுத்திருக்கிறோம்.
நட்பை பெறுவது எப்படி என்றும் இந்தியாவுக்கு தெரியும், கண்ணுக்கு கண் என்று வந்தால் பதிலடிகொடுக்கவும் தெரியும்.
தற்போதைய சூழ்நிலையில் மக்கள் அனைவரது ஒத்துழைப்பும் மிக அவசியம். தற்சார்பு பொருளாதார நடவடிக்கைக்கு நாடு முழுவதும் மக்கள் பேராதரவு தருகின்றனர். சுய சார்பை நோக்கி இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.