தர்மபுரி மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூலி
வேலைக்காக கர்நாடகா கேரளா
ஆந்திர
மாநிலத்துக்கு செல்வது வழக்கமாக இருந்து வந்த
நிலையில் வைரஸ்
காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில்
உள்ளதால் பொதுமக்கள் வெளி
மாவட்டங்கள் மற்றும் வெளி
மாநிலங்களுக்கு செல்வதும் வருவதும் தடை
செய்யப்பட்டது.
அதனால்
கர்நாடகா கேரளா
உள்ளிட்ட மாநிலங்களில் கூலி
வேலைக்குச் சென்றவர்கள் அங்கே
தங்கும் நிலை
ஏற்பட்டதால்அவர்களால் தங்களுடைய மாவட்டங்களுக்கு வர
முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கூலித்
தொழில்
செய்து
வந்த
பாலக்கோடு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் இருந்து சுமார்
60-க்கும்
மேற்பட்டவர்கள் தனது சொந்த
ஊருக்கு செல்வதாக தமிழக
அரசுக்கும் உயர்
கல்வித் துறை
அமைச்சருக்கும் தொலைபேசி மற்றும் வாட்ஸ்
அப்
மூலமாக
தகவல்
கொடுத்ததின் பேரில்
தமிழக
அரசும்
தர்மபுரி மாவட்ட
நிர்வாகமும் எடுத்த
நடவடிக்கை காரணமாக உடுப்பி மாவட்டத்தில் இருந்து 62 கூலி
தொழிலாளர்களை இரண்டு
பேருந்துகள் மூலம்
தர்மபுரி மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
தற்போது அனைவரையும் தர்மபுரி அடுத்த
செட்டிகரை பொறியியல் கல்லூரியில் உள்ள
தற்காலிக பரிசோதனை மையத்திற்கு அழைத்து வந்து
அவர்களுக்கு பரிசோதனை செய்து
வருகின்றனர்.
பரிசோதனைக்கு பிறகே
தொற்று
இருக்கிறதா இல்லையா என்பதை
பொருத்து அவர்களது சொந்த
கிராமங்களுக்கு அனுப்பி வைக்க
மாவட்ட
நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.