சென்னை : பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேருக்கு, மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் பெற இருக்கின்றனர். மறைந்த பின்னணி பாடகர், எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு, பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னணி பாடகி சித்ராவுக்கு பத்ம பூஷண் விருதும், வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம், பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா, இசை கலைஞர் பாம்பே ஜெய்ஸ்ரீ ஆகியோருக்கு, பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த விருது கலை, இலக்கியம், தொழில், விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகளை, மத்திய அரசு வழங்கி கவுரவிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை பெறுபவர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் 119 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், தமிழகத்தில் மட்டும் 11 பேருக்கு பத்ம விருதுகள் கிடைத்துள்ளன.
1.திருவேங்கடம் வீரராகவன்
மறைந்த மருத்துவர்
2.சுப்ரமணியன்
தொழிலதிபர் (சாந்தி சோஷியல் சர்வீஸ்)
3.சுப்புராமன்
சமூக சேவகர்
4.புதுச்சேரி கே.கேசவசாமி
கலைக்கான விருது
5.பாம்பே ஜெயஸ்ரீ
கர்நாடக இசைக்கலைஞர்
6.சாலமன் பாப்பையா
தமிழறிஞர்
7.சுப்பு ஆறுமுகம்
வில்லுப்பாட்டு கலைஞர்
8.பாப்பாம்மாள்
இயற்கை விவசாயி
9.ஸ்ரீதர் வேம்பு
தொழில்துறை
10.மறைந்த கேசி சிவசங்கர்
கலையுலகத்தைச் சேர்ந்தவர்
11.பி.அனிதா
விளையாட்டு வீராங்கனை